அமரர் ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் இறைபதமடைந்தது குறித்த நினைவு மலர்

அமரர் ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் இறைபதமடைந்தது குறித்த நினைவு மலர்
அமரர் ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் இறைபதமடைந்தது குறித்த நன்றி நவிலல்

யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கு சிந்துபுரம் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 07-02-2021 ஞயிற்றுக்கிழமை அன்று என்பதை அறியத்தருகிறோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் - கண்ணீர் அஞ்சலி
வட ஈழநாட்டில் வட்டுமேற்கு வட்டுக்கோட்டையில் ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களால் கையெழுத்துப் இதழாக ஆரம்பிக்கப்பட்ட தண்ணொளி தற்சமயம் ஒரு இணையத்தளமாக தமிழ்பேசும் மக்களின் உலகில்அவரின் நல்லாசிகளுடன் இயங்கிவருவது நீங்கள் அறிந்ததே.
எங்கள் கௌரவ ஆசிரியர் ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களுக்கு எமது கண்ணீரை அஞ்சலியாக்கி அவரின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கிறோம்.
தண்ணொளி ஆசிரியர் குழு

விரிந்த வையகம் வினைசூழ் உயிரினம்
   விந்தைமிகு மனிதஇனம் இவைதந்த பேரியற்கை
சரியாயளிக்கும் அரியமானிடரைப் பூமிக்கு - அவர்தம்மில்
   பவித்திரம் மேவியர் எம் ஆசான்
பரிவோடு எம்அறியாமை கொழுத்தி
   அறிவொளியாய் மாற்றிய பெருந்தகை
சிரிப்புடன் பிறருக்கு உவக்கும் அவர் சிந்தை
  சிவந்த கரத்தானையும் மேவிடும் விந்தை - அவர்
மரிக்கும் வேளைவர காலனே கலங்கி
  மருகி நின்றான் இறைதூதனின் பிறப்பன்று
அரிய குணத்தினனை அரவணைத்தான் உயிர்கொண்டான்
  அன்பான இறைவனடி சேர்ப்பித்தான்
எரி தணலோடு அவர்மெய் தகனமாயிடினும்
  எரியாது மேதகு வாழ்ந்த மெய்வாழ்வு......!
ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் - மரணச்செய்தி
ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் - கண்ணீர் அஞ்சலி

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் - கண்ணீர் அஞ்சலி
[smoothslider id=’9′]
Share