சீவக சிந்தாமணி – ஐம்பெரும் காப்பியங்கள்

தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் கதை அமைப்பு, கதை மாந்தர் படைப்பு, நூற்பயன் முதலான கூறுகளால் முழுமை பெற்றுத் திகழ்கின்றது. விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட சிறப்புடையது. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில் எழுந்த கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களுக்கு அடிப்படையாகவும், முன்னோடியாகவும் அமைந்துள்ள பெருமையுடையது.

சீவக சிந்தாமணி - ஐம்பெரும் காப்பியங்கள்