சமூகம் சார்ந்த அமைப்புகள்

இலங்கை என்பது சிறிய தேசம் அதில் உள்ளடங்கித் திமிறி வெளிவரத்துடிக்கும் சிறிய நாடு எமதீழம் அதனில் சிறிதாய் யாழ்ப்பாணம் அதனில் முத்தாய் வட்டுக்கோட்டை அதன் பிரிவுகளில்  ஒன்றாய் பொக்கிசமாய் மேற்குப் பகுதி அதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் முளைக்கும் சமூக நோக்கர்கள் அல்லது சமூகச் சிந்தனையாளர்கள் தம்மைச் சமூகத்தின் தலைகளாக வரிந்து புதிய பெயர் சூட்டுவர். பொதுநலம் பற்றிய சிந்தனையுடன் நன்மைசெய்ய வந்தவர்கள் தம் கருத்தை அல்லது தன் சிந்தனையை மட்டும் காப்பாற்ற முயல்வர்.அதற்காக பிரித்தாழும் அடக்குமுறையாளனின் தந்திரத்தைக் கையாள்வார்.அப்பாவிகளை மூளைச் சலவை செய்து தன்னுடைய கைப்பாவைகளாகுவார். ஊர் பிரிந்துவிடும்.வளர்ச்சிப்பணிகள் நின்றுவிடும். எல்லா வைபவங்களிலும்  ஏன் சாவுவீடுகளிலும் பல்வேறு அணிகளாக வாதிவர்.குழப்பவாதிகள் என ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி…….. வழமைபோல் வேடிக்கை பார்க்கும்  மக்களை விரக்தியின் எல்லைக்கு கொண்டு செல்வார்கள்.இப்போது புதிய சிந்தனைகளுடன் புதியவர்  வருவார் பிரதேசத்திற்கு புதிய குறியீட்டுப் பெயருடன்.  பின்னர் அவரும் தனது பாதைமாறி……….

இதுசக்கரமாய் சுழலும். இதில் வேடிக்கை என்னவெனில் ‘நடுநிலமை’ என்று சொல்லி ஒற்றுமை உரைத்து ஊர்க்காவலர்கள் போல்  சில அன்பர்கள் புதுஅவதாரம் எடுப்பார்கள் பாருங்கள்.என்ன அழகு  அழகோ அழகு . இதில் என்ன கொடுமை என்றால் ஒற்றுமையை வலியுறுத்தி தவறுகளைச் சுட்டிக்காட்டி மாற்றங்களுக்கு வழிவகுக்காமல் வெறுமனே தமது பாதுகாப்பு வட்டத்திற்குள் நின்று விடுவார்கள்.என்ன பரிதாபம் பாருங்கள்.

இன்னுமொரு வகையானவருண்டு…யார் தெரியுமா…..சமூகத்திற்கு கருத்து சொல்கிறோம் என்று அங்கிருந்து இங்கிருந்து சுட்டு தம் தமிழறிவைத் தம்பட்டம் அடிக்க பந்திபந்தியாய் கறிக்குதவாத சுரக்காயாய் பிறரை வசைபாடி தீர்வுக்கு வழி சொல்லாமல் பிளவுகளை கூட்டுவதுடன் அறிவுரை என்ற பேரில் இம்சை செய்யும் உம் போன்ற  இம்சைஅரசர்கள்  தான் என்று  நீங்கள் சொல்வது புரிகிறது. இருக்கலாம்.விமர்சனங்கள், கருத்துகள் ஆக்கபூர்வமாக இருப்பது தேவைதான்.ஆயினும் சில சங்கடங்களைச் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுவது நன்றுதானே. சரி நான் தொடங்கிய விடயத்துக்கு வருகிறேன்.

எமது சமூகம் என நாம் பார்ப்பது எது…? சமூகம் சார்ந்த அல்லது சமூக அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன ? தீர்வு எப்படி அமையலாம் ?

சாதியத்தின் பிரிவுகளாய் தமிழன் பிரிந்து கிடக்கிறான். அந்தந்த சாதியத்திற்குள்ளும் சிற்சிறு உட்பிரிவுகள் இதுதான் நிதர்சனம்.  அப்பிரிவுகள் புவியியல் ரீதியாக… விளையாட்டுக் கழகங்கள் ரீதியாக…கோயில் திருவிழாரீதியாக…பரம்பரை ரீதியாக இப்படி இன்னோரென்ன பிரிவுகள். ஒவொன்றும் அதை என் சமூகம் என எனச் சித்தாந்தம் வரைந்து கொள்ளும். சுற்றி  இறுக்கமான வெறுப்பு எனும் எல்லைகள் வரையப்பட்டும் .இப்படி நாம் இறுக்கப்பட்டிருப்பது தான் நிஜம்.

இந்த எல்லைகளை உடைத்து அனைவரையும் ஒன்றியமாக்குவதற்கு எமக்கு மனமிருந்தால் மட்டும் போதாது பிரிந்து கிடக்கும் மற்றவர்களும் முன்வரவேண்டும்.அவர்கள் முன்வராப்பட்சத்தில் எமது வட்டத்தைச் சார்ந்த பணிகளை முடக்கி நாம் சமூகச் சீர்திருத்தவாதிகளாக வலம் வருவதிற்பயனில்லை. எம்மைச்சுற்றிய அயலவரின் வளர்ச்சியில் சிறு பகுதியைக் கூட எம் தாயகத்தில் எட்டமுடியாதது ஏன்… மற்றவர்களுக்காக தமது கடமைகளை ஆற்ற தயங்குகிறோம் இதுதான் காரணம்.

சமூகம் சார்ந்த அமைப்பு முதலில் எது தன் சமூகம் என நிர்ணயித்தல் அவசியம். மற்றச் சமூகங்களுடன் நட்புப்பாராட்டுதல் நன்றுதான் எனினும் மற்றவர்களுக்காக எம் வளர்ச்சிப் பணிகளை நிராகரிப்பது எப்படி நியாயப்படுத்தப்பட முடியும். நாம் எம்மைச்சமூகச் சீர்திருத்த வாதிகளாக மட்டும் காட்டி  வேலைத்திட்டம் ஏதுமின்றி புற்றுநோய்போல் எம் வட்டத்தைச் சிறிது சிறிதாக அழித்து வருவது மட்டுமே நிஜம்.

இதற்கு என்ன வழி என்கிறீர்களா…?

சுலபம் முதலில் எம்மைச் சரிசெய்வோம். எமது வட்டத்தில் அல்லது எம் எல்லைக்குள் உள்ளவற்றைப் புனரமைப்போம்..நாம் போகும்பாதையின் திறன் கண்டு மற்றவர்கள் தம் எல்லைகளை உடைத்து உங்களுடன் கைசேர்ப்பர்.அப்போது ஒன்றுபடுங்கள்.

அதைவிடுத்து வெறும் வெளிநாட்டுப் பழமொழிகளையும் தத்துவமேதைகளையும் வரட்டுச் சித்தாந்தங்களையும் எம்மேல் வைத்து… வைத்து என்றோ வரப்போகும் ஒருநாள் விருந்துக்காக எம்மைப் பட்டினிபோட்டு இன்னல்ப்படுத்தாமல் தினம் ஒருவாய் கஞசியாவது குடிக்க விடுவீர்களா… என் மதிப்புக்குரிய வட்டுக்கோட்டை மேற்கு மக்கள் சார்ந்த  அமைப்புகளே……………?

அன்புடன் அமலன்

Share