வேதங்கள் மற்றும் உபநிஷத்துகள்

v

வேதங்கள் மற்றும் உபநிஷத்துகள்

    • வேதம், ஆகமம், தோத்திரம், சாத்திரம், புராணம், இதிகாசம் ஆகியன.
    • வேதம் என்பது – அறிவுநூல், மறை, சுருதி எனப்படும்.
    • வேதம், ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என நான்கு வகைப்படும்.
    • அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ள வரிவிதிப்பு கோல் – 1/6 வரி வசூலிக்கப்பட்டது.
  •  உபநிஷத்துகள் ஏற்காதது – சடங்குகள் மற்றும் வேள்விகள்
  • வேதத்தின் மறுபெயர் – ஸ்ருதி, எழுதாக் கிளவி
  • வேதத்தின் முக்கிய இலட்சியம் – தன்னைத்தானே அறிந்து கொள்ளல்
  • வேத நன்னடத்தை விதிகள் – ஸ்மிருதிகள் எனப்பட்டன.
  • வேதம் ஏற்றுக்கொள்ளும் அறக்கோட்பாட்டு தத்துவம் – ரிதா (இது தர்மநிலைக் கோட்பாட்டின் முன்வடிவம்)
  • வேதத்தை அடிப்படையாக ஏற்றுக் கொண்டு நடக்கும் தர்சனங்களின் பெயர் – ஆத்தீகம் (அ) வைதீகம்

ரிக் வேதம் ரிக் வேதம்

  • ரிக் என்பதற்கு – துதித்தல் (அ) வழிபடல் எனப்பொருள்.
  • வேதங்களில் பழமையானது – ரிக் (10 மண்டலங்கள், 1028 பாடல்கள்)
  • முதல் 7 மண்டலங்களில் இறைவனை அக்னியாக குறிப்பிடுவது – ரிக்வேதம்.
  •  10வது மண்டலத்தில் இறைவனை பிரமன், இந்திரன் என்ற பெயரில் குறிப்பிடுவது – ரிக்வேதம்
  • 10வது மண்டலத்தில் உள்ளது – புருஷசூக்தம் என்ற பாடல் (வர்ணங்களை விளக்குகிறது)
  • ரிக் வேதகால கடவுள்கள் – அக்னி, வருணன், இந்திரன்
  • ரிக் வேதம் – கி.மு.1200-க்கு முற்பட்டது
  • இறைவனை துதிப்பாடல் மூலம் வணங்க இவ்வேதம் வழிசெய்கிறது.

ரிக் வேதம்
RIGGU_VEDHA

யஜுர் வேதம்

  • ‘யாஜ்” என்ற சொல்லின் பொருள் – யாகம் என்பதாகும்.
  • யாகம், பலி, தானம் முதலிய கிரியைகளை செய்யவேண்டிய முறைகளைப் பற்றி குறிப்பிடுவது – யஜூர் வேதம்.
  • அமாவாசை, பௌர்ணமிக்கு செய்யவேண்டிய வேள்விகள், பிதுர்கர்மம் பற்றி கூறுவது – யஜூர் வேதம்
  • யஜூர் வேதத்திலுள்ள அடங்கியுள்ள சிறப்புவாய்ந்த பகுதி – ருத்ரம்
  • யஜுர் வேதம் – வேள்வி, சடங்குகள் பற்றியது (சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ய யஜுர் வேதம் என இரு பிரிவுகளை உடையது
  • யஜுர் வேதத்தில் உள்ள அத்தியாயங்கள் – 18

யஜுர் வேதம் – 1

YASUR1_opt

யஜுர் வேதம் – 2
YASUR2_opt

யஜுர் வேதம் – 3
YASUR3_opt

சாம வேதம்

  • வக்கதர் என்ற குறிப்பிட்ட புரோகிதர்களால் பாடப்பட்ட பாடல் தொகுப்பு – சாம வேதம் (1459 பாடல்கள் உள்ளன)
  • இறைவனை இசையுடன் பாடி துதிப்பேன் – சாம வேதம்
  • பாபம் நீக்கி பலன் கொடுக்கும் பாடல்கள் அடங்கியது – சாம வேதம்.

சாம வேதம் – 1
SAMA1_opt

சாம வேதம் – 2
SAMA2_opt

அதர்வண வேதம்

  • மந்திர உச்சரிப்பு முறை, விரோதி அழிவின் பொருட்டு செய்யப்படும் பில்லி, சூனியம் முறை, வேதசாரக்கிரியை, அனுஷ்டானங்களை பற்றிய தோத்திரங்கள் அடங்கியுள்ளது.
  • பிரம்ம வேதம் எனப்படுவது – அதர்வண வேதம் (731 பாடல்கள், 20 பகுதிகள்)
  • மந்திரம், பில்லி, சூனியம் பற்றியது – அதர்வண வேதம்

வேத அங்கங்கள்

  • பின்வேத காலத்தில் தோன்றிய வேத அங்கங்கள் – ஆறு
  • சிட்சை – எழுத்திலக்கணம்/ஒலியியல்
  • வியாகரணம் – சொல்லிலக்கணம்
  • நிருத்தம் – பொருளிலக்கணம்/சொல்லாக்கம்
  • கல்பம் – செயலிலக்கணம்/சமய சடங்கு ஒழுக்கம்
  • சந்தஸ் – யாப்பிலக்கணம்/சீர்
  • ஐயோதிஷம் – ஜோதிடம்

உபவேதங்கள்

  • உபவேதங்களின் எண்ணிக்கை – நான்கு
  • ஆயுர்வேதம் – ரிக் வேதத்தின் உபவேதம் (மருத்துவ நூல்)
  • தனுர் வேதம் – யஜுர் வேதத்தின் உபவேதம் (போர்க்கலை பற்றியது)
  • காந்தர்வ வேதம் – சாம வேதத்தின் உபதேசம் (இசை, நடனம், பற்றியது)
  • சில்ப வேதம் – அதர்வண வேதத்தின் உபவேதம் (கட்டக்கலைப் பற்றியது)

உபநிஷத்துக்கள்

  • நான்கு வேதப்பிரிவிலிருந்தும் சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம் போன்ற பாகங்களை சேர்ந்தவை – உபநிஷத்துக்கள்.
  • ‘உபநிஷத்’ என்பதன் பொருள் – ஆச்சார்யன்(குரு) அருகேயமர்ந்து ஞானம் பெறல்.
  • உபநிஷத்துகளின் வேறுபெயர் – திருநான்மறைமுடிபு
  • உபநிஷத்துகளின் எண்ணிக்கை மொத்தம் 108.
  • உபநிஷத்துகளுக்கு முதலில் பாஷ்யம் செய்தவர் — சங்கரர். அதன்பின் இராமானுஜர் வித்யாரண்யர் ஆனந்ததீர்த்தர் ஆகியோரும் பாஷ்யம் இயற்றியுள்ளனர்.
Share